ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான கூட்டணியின் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து!

Date:

ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான புதிய கூட்டணி தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதுடன் ஒப்பந்தம் ஒன்றும் சற்று முன்னர் கைச்சாத்திடப்பட்டது.

கொழும்பு சுகததாஸ உள்ளக அரங்கில் இன்று காலை ஆரம்பமான குறித்த நிகழ்வில் ஐக்கிய மக்கள் கூட்டணியில் அங்கம் வகிக்கும் பங்காளிக் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றிருந்தனர். அத்துடன் புதிய உறுப்பினர்களும் இக் கூட்டணியில் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவளிப்பதற்காக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு நேற்று ஐக்கிய மக்கள் கூட்டணியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டது.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளனர்.

இரு தப்பிற்கும் இடையிலுள்ள கொள்கையளவிலான 25 விடயங்கள் அடங்கலாக இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று கைச்சாத்திடப்பட்டிருந்தது.

இந்நிலையில் ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான புதிய கூட்டணி தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதுடன் இன்று புதிய ஒப்பந்தம் ஒன்றும் கைச்சாத்திடப்பட்டது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை(03) ஆரம்பிக்கப்படவுள்ளது. நாட்டரிசி நெல் 1கிலோகிராம்  120 ரூபாவிற்கும்...

IMF தரும் மகிழ்ச்சி செய்தி

இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) குறித்த நான்காவது மதிப்பாய்வை சர்வதேச...

நோர்வூட் பிரதேச சபையில் இ.தொ.கா. விரைவில் ஆட்சியமைக்கும்!

‘‘நுவரெலியா மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இ.தொ.காவும், தேசிய மக்கள் சக்தியும்...

தமிழக மீனவர்கள் 7 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு 400-க்கும் மேற்பட்ட...