விஜயதாச ராஜபக்ஷ வேட்புமனுவில் கையெழுத்திட்டார்

Date:

ஜனாதிபதி வேட்பாளர் விஜயதாச ராஜபக்ஷ இன்று (14) காலை வேட்பு மனுவில் கையொப்பமிட்டுள்ளார்.

மகாசங்கத்தினரின் ஆசீர்வாதத்திற்கு மத்தியில் விஜயதாச ராஜபக்ஷ, நாவலலில் உள்ள அவரது வீட்டில் வைத்து வேட்புமனுவில் கையொப்பமிட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

தேசிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக, பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ அண்மையில் கட்டுப்பணத்தை செலுத்தினார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் ஆதரவுடன் இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் அவர் போட்டியிடவுள்ளதாக ஆரம்பத்திலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், சஜித் பிரேமதாசவுக்கு மைத்திரிபால சிறிசேனா ஆதரவளிப்பாரா என்று ஊடகவியலாளர் ஒருவர் கேட்டதற்கு, அதற்கு பதிலளித்த விஜயதாச ராஜபக்ஷ,

”அப்படி ஒரு செய்தி உள்ளது. அவருடைய ஆதரவு கிடைக்கும். கிடைத்தால் ஏற்றுக்கொள்வேன். இல்லை என்றால் வருவதற்கு முகம்கொடுப்பேன்”. என்றார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

15 துறைகள் அத்தியாவசிய சேவைகளாக அறிவிப்பு

மின்சாரம், குடிநீர், சுகாதாரம், உணவு மற்றும் போக்குவரத்து, தகவல் தொடர்பு, ஒளிபரப்பு...

இலங்கைக்கு மீண்டும் கரம் கொடுக்கும் IMF

கடந்த சில ஆண்டுகளில் இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதிலும் வெளிநாட்டு கையிருப்பு...

ரம்புக்கனை அதிவேக நெடுஞ்சாலை இரண்டாம் கட்ட பணி தொடக்கம்

ரம்புக்கனை முதல் கலகெதர வரை அமைக்கப்படவுள்ள மத்திய அதிவேக நெடுஞ்சாலை திட்டத்தின்...

SJB+SLPP இணைந்ததால் NPP தோல்வி

இடைக்காலத் தடை உத்தரவினால் இடைநிறுத்தப்பட்டிருந்த வனாத்தவில்லு பிரதேச சபையின் தவிசாளரைத் தேர்ந்தெடுப்பதற்கான...