நாங்கள் யாரை ஆதரிப்போம் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தார்.
இன்று (14) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இன்று ஜனாதிபதி 13 ஆவது திருத்த சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பான விடயங்களை பலருடன் பேசிக்கொண்டு வருகிறார். 2022 ஆம் டிசம்பர் சகல கட்சிகளுடன் பேச்சுவார்த்தை ஆரம்பித்த போது நான் அவருக்கு வழங்கிய ஆவணத்தில் இருந்து தொடர்ச்சியாக பல ஆவணங்கள் கைமாற்றப்பட்டு இப்பொழுது அவர் ஒரு ஆவணத்தை வழங்கியுள்ளார்.
நேற்றைய தினம் அல்லது நேற்றைய முன்தினம் அதே ஆவணங்களை வேறு சில தமிழ் கட்சிகளுக்கும் வழங்கியுள்ளார். எங்களது கட்சி தலைவரிடமும் அதை பகிர்ந்துள்ளார். காணி அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு வழங்குவது தொடர்பாக அவரது பிரேணையை நாங்கள் பார்த்து இருக்கின்றோம் அதன் குறைப்பாடுகளை நான் சுட்டிக்காட்டியுள்ளேன்.
தேர்தல் நடைபெறுவதற்கு ஒரு சில நாட்கள் காணப்படுகின்றமையால் பல விடயங்கள் இங்கே செய்யமுடியமால் இருக்கும். தேர்தல் வருகின்ற காரணத்தினால் தான் இதை செய்கிறார். இல்லையென்றால் வாக்குகளைப் பெறுவதற்காக அனைவரும் 13 ஆவது திருத்த சட்டத்தை பற்றி இவ்வாறு விவாதிக்கின்றனர். ஆனால் வாக்கு கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை, தமிழ் மக்கள் காலங்காலமாக காத்திருக்கிறார்கள், அதன்படி நடந்து கொண்டால் அதுதான் எமக்கு வேண்டும்.
நாங்கள் யாரை ஆதரிப்போம் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை. அதற்கு இன்னுமும் கால அவகாசம் இருக்கிறது செப்டம்பர் 20 ஆம் திகதி நாங்கள் தெரிவித்தால் கூட மக்களுக்கு வாக்களிக்க தெரியும் என தெரிவித்தார்.