எக்சத் லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவொன்று இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் இன்று (14) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதாவது ரூ.5 கோடி லஞ்சம் பெற முயன்ற குற்றச்சாட்டின் பேரில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜானக ரத்நாயக்க இன்று காலை அந்த கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக கட்டுப் பணத்தை வைப்பிலிட்டதன் பின்னர் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் இந்த கைது இடம்பெற்றுள்ளது.