தலதா மாளிகையில் ஆசி பெற்றார் ரணில்

Date:

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுவை இன்று வியாழக்கிழமை கையளித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வரலாற்று சிறப்புமிக்க கண்டி தலதா மாளிகைக்கு சென்று மத வழிபாடுகளில் ஈடுபட்டு ஆசி பெற்றார்.

தலதா மாளிகைக்கு வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை, தியவடன நிலமே பிரதீப் நிலங்க தேல வரவேற்றார்.

பின்னர் தலதா மாளிகையின் மேல்மாடிக்கு சென்ற ஜனாதிபதி, மத வழிபாடுகளில் ஈடுபட்டார். தலதா மாளிகைக்கு வருகை தந்திருந்த மக்களிடம் நலன் விசாரித்த ஜனாதிபதி அவர்களுடன் சிநேகபூர்வமாக கலந்துரையாடினார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றிக்காக, அவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

பின்னர் மல்வத்து மகா விகாரைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி , மல்வத்து பீடத்தின் மகாநாயக்க வண. ஸ்ரீ சுமங்கல தேரரின் ஆசிர்வாதத்தைப் பெற்றுக் கொண்ட பின்னர் தேரருடன் சிறு கலந்துரையாடலில் ஈடுபட்டார். தேரர் பிரித் பாராயணம் செய்து ஜனாதிபதிக்கு ஆசி வழங்கினார்.

அதன் பின்னர் அஸ்கிரி மகா விகாரைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க வண.வரகாகொட ஸ்ரீ ஞானரதன தேரருடன் சிறு கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

அஸ்கிரி மகாநாயக்க தேரர் தலைமையிலான அஸ்கிரி பீடத்தின் மகா சங்கத்தினர், இதன்போது ஜனாதிபதிக்கு பிரித் பாராயணம் செய்து ஆசி வழங்கினர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

15 துறைகள் அத்தியாவசிய சேவைகளாக அறிவிப்பு

மின்சாரம், குடிநீர், சுகாதாரம், உணவு மற்றும் போக்குவரத்து, தகவல் தொடர்பு, ஒளிபரப்பு...

இலங்கைக்கு மீண்டும் கரம் கொடுக்கும் IMF

கடந்த சில ஆண்டுகளில் இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதிலும் வெளிநாட்டு கையிருப்பு...

ரம்புக்கனை அதிவேக நெடுஞ்சாலை இரண்டாம் கட்ட பணி தொடக்கம்

ரம்புக்கனை முதல் கலகெதர வரை அமைக்கப்படவுள்ள மத்திய அதிவேக நெடுஞ்சாலை திட்டத்தின்...

SJB+SLPP இணைந்ததால் NPP தோல்வி

இடைக்காலத் தடை உத்தரவினால் இடைநிறுத்தப்பட்டிருந்த வனாத்தவில்லு பிரதேச சபையின் தவிசாளரைத் தேர்ந்தெடுப்பதற்கான...