முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அங்கத்துவத்திலிருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளதாக ஹரீஸ் எம்.பிக்கு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டது.
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கட்சியால் எடுக்கப்பட்ட தீர்மானங்களை பொருட்படுத்தாத காரணத்தினால் அதற்கு சரியான விளக்கமளிக்குமாறு கோரி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் செயலாளர் நாயகம் நிஸாம் காரியப்பர் ,அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம் .ஹாரிஸுக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.
தலைவரின் உத்தரவுப்படி கட்சியின் அங்கத்துவத்திலிருந்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஹாரிஸுக்கு இதன்மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஹரீஸ் எம்.பி ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளரான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியான பின்புலத்திலேயே இந்த அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது.