காஸ் சிலிண்டர் சின்னம் மீதான முறைப்பாடு அடிப்படையற்றது – தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிப்பு

Date:

“வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்கப்பட்ட சமையல் எரிவாயு சிலிண்டர் குறித்து ஒரு தரப்பினர் முன்வைத்துள்ள முறைப்பாடு அடிப்படையற்றது. உள்ளூராட்சி சபைத் தேர்தல் சட்டத்துக்கும், ஜனாதிபதித் தேர்தல் சட்டத்துக்கும் இடையில் வேறுபாடுகள் காணப்படுகின்றன. ஆகவே, இந்த முறைப்பாட்டை ஏற்க முடியாது.”

  • இவ்வாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்தார்.

தேர்தல்கள் அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தபால் மூல வாக்களிப்புக்கு 7 இலட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளார்கள். எதிர்வரும் 26 ஆம் திகதி வாக்களிப்பு அட்டைகள் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கு விநியோகிக்கப்படும்.

செப்டெம்பர் 21 ஆம் திகதி வாக்கெடுப்புக்கான வாக்களிப்பு அட்டைகள் செப்டெம்பர் மாதம் முதல் வாரத்தில் கிராம சேவகர் பிரிவுகள் ஊடாக வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்படும்.

சுயேச்சை வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்கப்பட்டுள்ள சமையல் எரிவாயு சிலிண்டர் சின்னம் குறித்து ஒரு தரப்பினர் தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடு அளித்துள்ளார்கள். இந்த முறைப்பாடு அடிப்படையற்றது. ஏனெனில் உள்ளூராட்சி சபைத் தேர்தல் சட்டத்துக்கு அமைவாகவே எரிவாயு சிலிண்டர் சின்னம் ஒரு தரப்பினருக்கு வழங்கப்பட்டது.

ஜனாதிபதித் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிடும் நபருக்கு சமையல் சிலிண்டர் சின்னம் வழங்கப்பட்டுள்ளது. ஆகவே, உள்ளூராட்சி சபைத் தேர்தல் சட்டத்துக்கும், ஜனாதிபதித் தேர்தல் சட்டத்துக்கும் இடையில் பாரிய வேறுபாடுகள் காணப்படுகின்றன. ஆகவே, இந்த முரண்பாட்டை நிராகரித்துள்ளோம்.

தேர்தல் செலவுகள் ஒழுங்குபடுத்தல் சட்டத்துக்கு அமைய வேட்பாளர் ஒருவர் வாக்காளர் ஒருவருக்கு எவ்வளவு செலவழிக்க வேண்டும் என்பது தொடர்பான வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. அனைத்து வேட்பாளர்களும் இந்தச் சட்டத்துக்கு அமையச் செயற்பட வேண்டும்.

வாக்கெடுப்பு நிறைவடைந்து 21 நாட்களுக்குள் வேட்பாளர் தேர்தல் கால செலவுகள் குறித்து உரிய ஆவணங்களை ஆணைக்குழுவுக்கு ஒப்படைக்க வேண்டும். சட்டத்துக்கு முரணாகச் செயற்படும் வேட்பாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.” – என்றார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

எரிபொருள் விலை குறைப்பு

இன்று (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய...

வெலிக்கடை தமிழர் படுகொலை! கொல்லப்பட்ட குட்டிமணி மற்றும் குழுவினர் அடக்கம் செய்யப்பட்ட இடம் வெளியாகியுள்ளது! (EXCLUSIVE)

நான்கு தசாப்தங்களுக்கு முன்னர் வெலிக்கடை சிறையில் சிங்கள கைதிகளால் இரண்டு நாட்களில்...

பத்மே உட்பட 5 பேர் தொடர்பில் இன்று நீதிமன்றத்தில் தகவல்

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட கெஹெல்பத்தர பத்மே உட்பட 5...

வென்னப்புவ துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

வென்னப்புவ காவல் நிலையத்திற்கு அருகிலுள்ள வேவா சாலைப் பகுதியில் இன்று (31)...