எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர்களான சாரதி துஷ்மந்த மற்றும் அங்கஜன் இராமநாதன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மைத்திரி அணியை பிரதிநிதித்துவப்படுத்திய இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களாவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.