ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
தேர்தல் தொடர்பான முறைப்பாடுகள் தொடர்பில் நேற்று (04) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், அக்காலப்பகுதியில் 4 வாகனங்களையும் பொலிஸார் பொறுப்பேற்றுள்ளதாக தெரிவித்தார்.
“தேர்தல் தொடர்பான 173 முறைப்பாடுகள் பொலிஸ் திணைக்களத்திற்கு கிடைத்துள்ளன.
அந்த முறைப்பாடுகளை குற்றவியல் முறைப்பாடுகள் மற்றும் தேர்தல் சட்ட மீறல் முறைப்பாடுகள் என வகைப்படுத்துகிறோம்.
இந்த 173 முறைப்பாடுகளில் தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் 119 முறைப்பாடுகளும் 54 குற்றவியல் முறைப்பாடுகளும் அடங்கியுள்ளன.
இதுவரை 22 ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், 4 தனியார் வாகனங்களும் பொறுப்பேற்கப்பட்டுள்ளன” என்றார்.