தகுதி தராதரம் பாராது ஈஸ்டர் தாக்குதலின்பிரதான சூத்திரதாரிகளுக்குத் தண்டனை – பேராயரிடம் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் வாக்குறுதி

Date:

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கும் இடையிலான விசேட சந்திப்பு இன்று காலை கொழும்பு பேராயரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு நீதி நிலைநாட்டப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இங்கு வாக்குறுதியளித்தார்.

“உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்களைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் நியமிக்கப்படுகின்ற நீதிமன்றக் கட்டமைப்புக்குத் நாம் தோள் கொடுப்போம். நீதிமன்றக் கட்டமைப்பை மேலும் உறுதிப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்போம். இதற்காக மேற்கொள்ள வேண்டிய சட்ட ரீதியான நடவடிக்கைகளை முறையாகச் செயற்படுத்துவோம்.” –  என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இங்கு வாக்குறுதியளித்தார்.

அவ்வாறே, உயர்த்து ஞாயிறு தினத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்களை வழங்குவதோடு, இதன் பிரதான சூத்திரதாரிகளுக்குத் தகுதி தராதரம் பாராது தண்டனையைப் பெற்றுக்கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுப்பேன் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் சுட்டிக்காட்டினார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நோர்வூட் பிரதேச சபையில் இ.தொ.கா. விரைவில் ஆட்சியமைக்கும்!

‘‘நுவரெலியா மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இ.தொ.காவும், தேசிய மக்கள் சக்தியும்...

தமிழக மீனவர்கள் 7 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு 400-க்கும் மேற்பட்ட...

பஸ் கட்டண திருத்தம்?

எரிபொருள் விலை திருத்தத்துடன் பஸ் கட்டண திருத்தம் தொடர்பாக அடுத்த 2...

கஹாவத்தை துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

கஹவத்த பகுதியில் நேற்று இரவு (30) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...