உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் வீடுகளுக்கு வழங்கும் பணி இன்று (14) நிறைவடையும் என தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்றைய இறுதிக்குள் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் வீடுகளுக்கு கிடைக்காவிடின், வாக்காளர்கள் தமது பிரதேசத்திலுள்ள தபால் நிலையத்திற்குச் சென்று தமது அடையாளத்தை உறுதிப்படுத்தி அதனைப் பெற்றுக்கொள்ள முடியும் என பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க குறிப்பிட்டார்.