தனிப்பட்ட காரணங்களுக்காக அதிபர் பணி நீக்கம்?

0
162

கடந்த 3 வருடங்களில் சட்டக்கல்லூரியில் பெரும் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்கு உழைத்த தற்போதைய அதிபர் கலாநிதி அதுல பத்திநாயக்கவின் சேவை நீடிப்பை நிராகரிக்க சட்டக் கல்விப் பேரவை தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு சட்டத்தரணி சமூகத்தினரிடையே இது தொடர்பில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.

சட்டக்கல்லூரியில் பதிநாயக்க பழைய நிறுவன முகாமைத்துவ கட்டமைப்பை நவீனமயப்படுத்தி மாணவர்களுக்கு பல நவீன பௌதீக வளங்களை வழங்கி, குறித்த நேரத்தில் பரீட்சைகளை நடாத்தி, சர்வதேச மட்ட கல்வி வாய்ப்புகளை ஏற்படுத்தித் தந்தமை சட்டத்துறையில் வெகுவாகப் பாராட்டப்பட்டது.

கடந்த காலம் முழுவதும் பதிநாயக்காவுக்கு எதிராக பல அநாமதேய குற்றச்சாட்டுகள் மற்றும் அவதூறு தாக்குதல்கள் முன்வைக்கப்பட்டன.

இந்த முடிவு சட்டக்கல்லூரியில் முன்னேற்றம் தேடும் பெரும்பான்மையான வழக்கறிஞர்கள் மற்றும் சட்ட மாணவர்களை வருத்தமடைய செய்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here