எதிர்வரும் தேர்தலில் போட்டியிடுவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி அவர் அரசியலில் இருந்து முழுமையாக ஓய்வு பெற உள்ளார்.
அரசியலில் நிலவும் பாதகமான சூழல், உடல்நிலை, வயது போன்றவற்றை கருத்தில் கொண்டு அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.
பாரம்பரிய அரசியல் மீது முன்வைக்கப்படும் விமர்சனங்களும் இதில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதும் தெரிந்ததே.
முப்பது ஆண்டுகாலப் போரை முடிவுக்குக் கொண்டு வரவும், பொருளாதார வளர்ச்சி விகிதத்தை 7.6% ஆகக் கொண்டு வரவும், ஜனாதிபதியாக இருந்த காலத்தில் தேசிய உற்பத்தியை 84 பில்லியன் டொலர்களாக உயர்த்தவும் அவரால் முடிந்தது.