மீண்டும் விசேட உரை நிகழ்த்த தயாராகும் ரணில்

0
151

ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு தொடர்பாக விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட இரண்டு குழுக்கள் குறித்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார்.

முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில இந்த விடயத்தை வெளிப்படுத்தியதன் பின்னர் கருத்து வெளியிடுவதற்கு ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளதாக விக்கிரமசிங்கவிற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான புதிய விசாரணைகளை ஆரம்பிப்பதற்காக தற்போதைய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் நியமிக்கப்பட்ட ஷானி அபேசேகர மற்றும் ரவி செனவிரத்ன ஆகிய இரு அதிகாரிகளும் ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு தொடர்பான முன்னெச்சரிக்கைகளை புறக்கணித்தமைக்கு பொறுப்பானவர்கள் என கம்மன்பில தெரிவித்தார்.

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பான எச்சரிக்கைகள் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக விக்கிரமசிங்க நியமித்த குழுவின் உண்மைகளை வெளிப்படுத்திய கம்மன்பில, முன்னெச்சரிக்கைகளை புறக்கணித்தமைக்கு அபேசேகரவும் செனவிரத்னவும் பொறுப்பு என்று குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here