ஜனாதிபதியிடம் இன்று கையளிக்கப்படவுள்ள முக்கிய அறிக்கை

0
103

நாட்டில் உள்ள அரிசி மற்றும் நெல் கையிருப்பு தொடர்பில் நுகர்வோர் அதிகார சபையினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை இன்று (28) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் கையளிக்கப்படவுள்ளது.

இது தொடர்பான அறிக்கையை தயாரிக்கும் பணிகள் நிறைவுற்றிருப்பதாக விவசாய அமைச்சின் செயலாளர் எம்.பி.என்.எம்.விக்கிரமசிங்க தெரிவித்தார்.

ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் கடந்த இரு தினங்களாக அநுராதபுரம், பொலன்னறுவை, அம்பாறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள அரிசி ஆலைகளில் உள்ள அரிசி மற்றும் நெல் இருப்பின் அளவுகள் குறித்த தரவுகளை பெறுவதற்கு நுகர்வோர் அதிகாரசபை செயற்பட்டிருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here