அநுர அரசு மீதுமக்கள் அதிருப்தி- இராதா தெரிவிப்பு

Date:

“ஜனாதிபதி அநுர தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசின் மீது மக்களிடையே அதிருப்தி ஏற்பட்டிருப்பதை எல்பிட்டிய சபைத் தேர்தல் முடிவுகள் வெளிக்காட்டுகின்றன. இதே நிலை நாடாளுமன்றத் தேர்தலிலும் ஏற்படும்.”

– இவ்வாறு மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்குக்  கூட்டணியின் இணைத் தலைவரும் ஐக்கிய மக்கள் கூட்டணியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“பொதுவாக இலங்கை அரசியலில் ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்து அதில் வெற்றி பெறும் ஜனாதிபதி மற்றும் அவருடைய கட்சி அடுத்து வருகின்ற அனைத்து தேர்தல்களிலும் பாரியளவில் வெற்றி பெறுவதை நாம் கடந்த காலங்களில் பார்த்திருக்கின்றோம்.

ஆனால், ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்து ஒரு மாதத்தின் பின்பு நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளைத் தேசிய மக்கள் சக்திக்குப் பெற முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

அதற்குக் காரணம் இந்த ஜனாதிபதியின் மீதும், அரசின் மீதும் அதிருப்தி ஏற்பட்டிருப்பதைக்  காட்டுகின்றது. ஜனாதிபதி அநுர  எதிர்க்கட்சியில் இருந்தபோது தான் பதவிக்கு வந்தால் 48 மணித்தியாலங்களில் பல மாற்றங்கள் செய்வதாகக் கூறினார்.

பல அதிசயங்கள் செய்யக்கூடிய திறமை தன்னிடமும் தனது குழுவினரிடமும் இருப்பதாக அவர் கூறினார். ஆனால், இப்போது நான் மந்திரவாதியோ, தந்திரவாதியோ இல்லை என அவர் கூறுகின்றார். இதுதான் உண்மையான நிலைமை.

பதவிக்கு வருவதற்கு முன்பும் எதிர்க்கட்சியில் இருந்து கொண்டும் எதை வேண்டுமானாலும் பேசலாம். ஆனால், நாட்காலியில் அமர்ந்தவுடன் தான் கூறியதை நடைமுறைப்படுத்துவதில் எவ்வளவு சிக்கல்கள் இருக்கின்றன என்பதை அப்போதுதான் புரிந்துகொள்ள முடியும்.

எனவே, நிதானமாக சிந்தித்துச் செய்யக்கூடிய விடயங்களை மாத்திரம் மக்களிடம் கூற வேண்டும். அதனையே ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், ஏனைய அங்கத்தவர்களும் செய்கின்றார்கள்.

இதனடிப்படையில் நாங்கள் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்களின் வெற்றிகளைக்  கொண்டு புதிய அரசை அமைக்கக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.” – என்றுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பஸ்களை அலங்கரிக்கத் தடை

பஸ்களை அலங்கரிப்பதற்கும், மேலதிக பாகங்களை பொருத்துவதற்கும் சட்ட அனுமதிகளை வழங்கி வெளியிடப்பட்ட...

பாடசாலை விடுமுறை குறித்து கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு

2026 ஆம் ஆண்டில் பின்பற்றப்பட வேண்டிய பாடசாலைகளுக்கான தவணை அட்டவணையை கல்வி,...

நேபாளத்தின் இடைக்கால பிரதமராக சுஷிலா கார்க்கி நியமிப்பு

நேபாளத்தின் இடைக்கால பிரதமராக முன்னாள் பிரதம நீதியரசர் சுஷிலா கார்க்கி நியமிக்கப்பட்டுள்ளதாக...

பெக்கோ சமனின் நெருங்கிய நண்பர் கைது

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தலைவர்களில்...