முன்னாள் அமைச்சர்களினால் அரசாங்கத்திடம் கையளிக்கப்படாத உத்தியோகபூர்வ இல்லங்களை இன்று 30ம் திகதிக்குள் கையளிக்குமாறும், இல்லையேல் அவற்றிற்கு எதிராக சட்ட ரீதியான தீர்வு காணப்படும் என்றும் பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.
நீர், மின்சாரம் உள்ளிட்ட கட்டணங்களை செலுத்திய பின்னர் குடியிருப்புகளை ஒப்படைக்க வேண்டும் என அமைச்சு தெரிவித்திருந்தது.
28 அரசாங்க அமைச்சர் குடியிருப்புகள் உள்ளதாகவும் அதில் 12 முன்னாள் அமைச்சர்கள் இன்னும் தங்களுடைய குடியிருப்புகளை ஒப்படைக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.