மாணவர்களுக்கு சலுகை வழங்கும் அநுர

0
267

வினைத்திறன் மிக்க டிஜிட்டல் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கும், பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை புத்தகங்களை கொள்வனவு செய்வதற்கான கொடுப்பனவை வழங்குவதற்கும் செயற்பட்டு வருவதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கண்டி மஹியாவ வெவெல்பிட்டிய மைதானத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.

பொதுத் தேர்தலில் கண்டி மாவட்டத்தில் போட்டியிடும் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களை வெற்றிப் பெறச் செய்ய பெருந்தொகையான மக்கள் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here