உக்ரைனின் தற்போதைய நிலைமைக்கு மத்தியில் அவதானத்துடன் செயற்படுமாறு அங்கு வாழும் இலங்கையர்களுக்கு வௌிவிவகார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்க்குமாறு உக்ரைன் வாழ் இலங்கையர்களுக்கு வௌிவிவகார அமைச்சு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
உக்ரைனில் வசிக்கும் மாணவர்களின் பாதுகாப்பையும் நலனையும் உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் அங்காராவில் உள்ள தூதரகத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
உக்ரைனிலுள்ள 14 இலங்கை மாணவர்களில் 6 பேர் தற்காலிகமாக நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகவும் ஏனைய மாணவர்களுடன் அங்காராவில் உள்ள இலங்கை தூதரகம் நெருங்கிய தொடர்பில் உள்ளதாகவும் அமைச்சு மேலும் கூறியுள்ளது.