13 வயதுடைய பாடசாலை மாணவனை பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றச்சாட்டின் பேரில் வட்டவளை ரொசெல்லா ஹைதாரி விகாரையின் பிரதம பிக்கு நேற்று (21) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த மாணவன் கடந்த 20ஆம் திகதி விகாரைக்கு வரவழைக்கப்பட்டு பிரதம பிக்குவால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இது தொடர்பில் மாணவன் தனது தந்தையிடம் கூறியதையடுத்து தந்தை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதன் பிரகாரம், மாணவன் சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு அறிக்கை பெறப்படவுள்ள நிலையில், பிரதம பிக்குவை ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வட்டவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.