வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்பு குழுக்கள் இலங்கையில்

0
204

பொதுத் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் 50 வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் ஈடுபடவுள்ளனர் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பாளர்கள் ஏற்கனவே இலங்கைக்கு வருகை தந்துள்ளனர் என ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஆசிய தேர்தல் கண்காணிப்பு வலையமைப்பின் கண்காணிப்பாளர்களும் எதிர்வரும் நாட்களில் வருகைதரவுள்ளனர் என தேர்தல் ஆணைக்குழு கூறியுள்ளது.

தேர்தல் ஆணைக்குழுவின் அழைப்பிற்கிணங்க மேலும் 08 நாடுகளின் தேர்தல் கண்காணிப்பாளர்களும் வருகை தரவுள்ளனர் என தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் குறிப்பிட்டுள்ளார்.

சார்க் வலய நாடுகள் மற்றும் ரஷ்யாவை பிரதிநிதித்துவப்படுத்தி அவர்கள் இலங்கைக்கு வரவுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here