ஜி.எஸ்.டி வரிச் சலுகை தொடர்பான நீதிமன்றின் தீர்ப்பு தொடர்பில் சபாநாயகர் அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
ஜி.எஸ்.டி வரி தொடர்பான சட்டமூலத்தில் உள்ள சரத்துக்கள் அரசியலமைப்பிற்கு முரணானவை என உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இன்று நாடாளுமன்ற அமர்வினை தொடங்கி வைத்து உரையாற்றும் போதே சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இதனை தெரிவித்தார்.
விசேட பண்டங்கள் மற்றும் சேவைகள் வரி சட்டமூலத்தின் சில சரத்துகள் அரசியலமைப்புக்கு ஏற்புடையதல்ல எனத் தெரிவித்து உயர்நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது.மேலும் அதனை நிறைவேற்ற வேண்டுமாயின், நாடாளுமன்றில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை, சர்வஜன வாக்கெடுப்பினாலும் அங்கீகரிக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
ஆகவே விசேட பண்டங்கள் மற்றும் சேவைகள் வரி சட்டமூலத்தை நிறைவேற்ற வேண்டும் எனில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை, சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளதாக சபாநாயகர் தெரிவித்தார்.