சுற்றுலா வந்த தென்னிலங்கை பெண் யாழ்ப்பாணத்தில் விபத்தில் சிக்கி பலி

Date:

தென்னிலங்கையில் இருந்து யாழ்ப்பாணத்துக்குச் சுற்றுலா வந்த பெண்ணொருவர் விபத்தில் சிக்கி படுகாயமடைந்திருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கம்பஹாவைச் சேர்ந்த டோனி ப்ரெயன் பெரேரா ரணசிங்க வீரக்கொடி புஸ்பராணி என்பவரே உயிரிழந்துள்ளார்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கடந்த 9ஆம் திகதி சுற்றுலாவுக்காக யாழ்ப்பாணம் வந்துள்ளனர். மறுநாள் அவர்கள் காங்கேசன்துறை நோக்கி தமது காரில் பயணித்துக்கொண்டிருந்த வேளை காரும் பட்டா ரக வாகனமும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

அதில் படுகாயமடைந்த பெண்ணை மீட்டு தெல்லிப்பழை  வைத்தியசாலையில் சேர்த்த நிலையில் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

அங்கு மேற்படி பெண் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று திங்கட்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

விபத்து தொடர்பில் தெல்லிப்பழை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அனுரவிடம் சஜித் விடுத்துள்ள அவசர கோரிக்கை

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவை தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்ட எதிர்கட்சி தலைவர்...

இன்றும் மழை நீடிக்கும்

இன்றையதினம் (23) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை,...

IMF கடன் கிடைத்த கையோடு விலை கிடுகிடுவென உயரும்

தற்போதைய அரசு சர்வதேச நாணய நிதியத்திலிருந்து (IMF) கடன் தவணைகளான இரண்டையும்...

SJBயிடம் தோல்வியுற்ற NPP

ஹிரியால பல்நோக்கு சேவை கூட்டுறவு சங்கத்தின் இயக்குநர் சபையைத் தேர்ந்தெடுக்க இன்று...