ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் பிறந்த தினம் இன்று (நவம்பர் 24) கொண்டாடப்படுகிறது.
1968 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 24 ஆம் திகதி மாத்தளை கலேவெலவில் பிறந்த இவருக்கு தற்போது 56 வயது.
பாடசாலை பருவத்தில் இருந்தே ஜே.வி.பியின் அரசியலில் ஈடுபட்டு 1995 இல் ஜே.வி.பியின் மத்திய குழு 1998 இல் ஜே.வி.பியின் அரசியல் குழு உறுப்பினர் ஆனார்.
2000 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்திய அனுரகுமார திஸாநாயக்க, 2004-2005 காலப்பகுதியில் விவசாயம், கால்நடை வளங்கள், நீர்ப்பாசனம் மற்றும் காணி அமைச்சராக கடமையாற்றினார்.
2014 இல் ஜனதா விமுக்தி பெரமுனாவின் தலைவரானார் மற்றும் 2015-2018 காலகட்டத்தில் எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளராக பணியாற்றினார்.
2024 ஆம் ஆண்டு செப்டெம்பர் 21 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற அனுரகுமார திஸாநாயக்க, தற்போது மூன்றில் இரண்டு பங்கு பாராளுமன்ற அதிகாரத்தை கொண்ட அரசாங்கத்தை வழிநடத்தி வருகின்றார்.