போனஸ் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு மின்சார சபை ஊழியர் சங்கம் கோரிக்கை

0
208

இலங்கை மின்சார சபை இலாபகரமான நிலையை அடைந்துள்ளதால், ஊழியர்களுக்கான விசேட கொடுப்பனவை (போனஸ்) எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு முன்னர் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை மின்சார சபையின் தலைவரிடம் இலங்கை மின்சார ஊழியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பில், இலங்கை மின்சார சபையின் தலைவருக்கு எழுத்து மூலம் அறிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சன் ஜெயலால் தெரிவித்தார்.

இலங்கை மின்சார சபை கடந்த காலங்களில் இலாபம் ஈட்டியதால், அதன் பலன்களை ஊழியர்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும் என குறித்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கை மின்சார சபைக்கு நட்டம் ஏற்படுவதாக கூறி, சுமார் இரண்டு வருடங்களாக இலங்கை மின்சார சபை ஊழியர்களுக்கு விசேட கொடுப்பனவு (போனஸ்) வழங்க நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என இலங்கை மின்சார ஊழியர் சங்கம் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here