குடாநாட்டில் அடைமழையால் 7 ஆயிரத்து 416 பேர் பாதிப்பு!

Date:

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் அடைமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் ஏனைய அனர்த்தங்களால் 2  ஆயிரத்து 35 குடும்பங்களைச் சேர்ந்த 7 ஆயிரத்து 416 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும், 21 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன எனவும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

“சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவில் வெள்ள அனர்த்தத்தால் இதுவரை 288 குடும்பங்களைச் சேர்ந்த 945 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 10 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

ஊர்காவற்றுறை பிரதேச செயலர் பிரிவில் 215 குடும்பங்களைச் சேர்ந்த 901 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 2 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவில் 10 குடும்பங்களைச் சேர்ந்த 35 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 8 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

நல்லூர் பிரதேச செயலர் பிரிவில் வெள்ள அனர்த்தம் மற்றும் இடி, மின்னல் தாக்கத்தால் 29 குடும்பங்களைச் சேர்ந்த 93 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீடொன்றும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவில் 21 குடும்பங்களைச் சேர்ந்த 64 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சங்கானைப் பிரதேச செயலர் பிரிவில் 574 குடும்பங்களைச் சேர்ந்த 2  ஆயிரத்து 341 பேர் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஒரு வீடு முழுமையாகவும், ஒரு வீடு பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.

காரைநகர் பிரதேச செயலர் பிரிவில் 141 குடும்பங்களைச் சேர்ந்த 508 பேர் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 2 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவில் 266 குடும்பங்களைச் சேர்ந்த 932 பேர் பல அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 2 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் 19 குடும்பங்களைச் சேர்ந்த 73 பேர் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 4 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

யாழ்ப்பாணம் பிரதேச செயலர் பிரிவில் 470 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 520 பேர் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் உடுவில் பிரதேச செயலர் பிரிவில் 2 குடும்பங்களைச் சேர்ந்த 4 பேர் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஒரு வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளது.” – என்றார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இன்றும் மழை நீடிக்கும்

இன்றையதினம் (23) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை,...

IMF கடன் கிடைத்த கையோடு விலை கிடுகிடுவென உயரும்

தற்போதைய அரசு சர்வதேச நாணய நிதியத்திலிருந்து (IMF) கடன் தவணைகளான இரண்டையும்...

SJBயிடம் தோல்வியுற்ற NPP

ஹிரியால பல்நோக்கு சேவை கூட்டுறவு சங்கத்தின் இயக்குநர் சபையைத் தேர்ந்தெடுக்க இன்று...

அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை

இலங்கையிலுள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 27 ஆம் திகதி புதன்...