இன்றைய தினமும் மோசமான வானிலை

0
59

வடகிழக்கு கரையோரத்தில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை இன்று (28) சூறாவளி புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது.

வட மாகாணம் மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் கேகாலை மாவட்டங்களிலும் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும்.

இதேவேளை தெதுரு ஓயாவின் நீர்மட்டம் வேகமாக அதிகரித்துள்ளது. வாரியபொல, நிக்கவெரட்டிய, மஹவ, கொபேகனே, பிங்கிரிய, பல்லம, ஆராச்சிக்கட்டுவ மற்றும் ரஸ்நாயக்கபுர பிரதேச செயலகப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சீரற்ற காலநிலையால் 21 மாவட்டங்களில் 330,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

களனி, நில்வலா, மகாவலி, யான் ஓயா, மா ஓயா, மல்வத்து ஓயா, மஹா ஓயா மற்றும் அத்தனகலு ஓயா ஆகிய பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here