எரிபொருள் விலையில் ஏமாற்றதுடன் கூடிய மாற்றம்

Date:

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் படி இன்று (30) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருளின் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதற்கமைய, 311 ரூபாவாக இருந்த  ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 02 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 309 ரூபாவாகும்.

283 ரூபாவாக இருந்த ஒட்டோ டீசல் லீற்றர்  ஒன்றின் விலை 03 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 286 ரூபாவாகும்.

மேலும், மண்ணெண்ணெய் 05 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு 188 ரூபாவாக விற்பனை செய்யப்படவுள்ளது.

இதேவேளை, ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர்  ஒன்றின் விலையிலும், சுப்பர் டீசலின் விலையிலும் எவ்விதமான மாற்றம் மேற்கொள்ளப்படவில்லை என இலங்கை பெற்றோலியக் கூட்டத்தாபனம் அறிவித்துள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

வெசாக் விடுமுறை, விசேட வர்த்தமானி

2026ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் உற்சவத்தின் உத்தியோகபூர்வ நிகழ்வு மே மாதம்...

நிதி திருட்டுக்கு ஜனாதிபதி, நிதி செயலாளர் பொறுப்பு

மத்திய காசாகாரத்திலிருந்து அமெரிக்க டாலர் 2.5 மில்லியன் தொகை காணாமல் போன...

ஷம்மி சில்வாவை அகற்றும் முடிவு பொய்

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வாவை அந்த பதவியில் இருந்து...

1000 கோடி தர முடியாது – சட்டத்தின் ஊடாக மோதி பார்ப்போம்!

விவசாயம், நிலம், பாசனம் மற்றும் கால்நடை வளங்கள் அமைச்சர் கே.டி. லால்காந்தின்...