லண்டன் பெண் சட்டத்தரணியின் தூண்டுதலில் திருடிய நால்வர் விளக்கமறியலில்

0
19

கடந்த 2025ஆம் ஆண்டு இரவு வேளையில் வீடு புகுந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட நால்வர் எதிர்வரும் 23ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸாரால் திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் நான்கு சந்தேகநபர்களை நேற்று இரவு கைது செய்தனர்.

கடந்த 2025ஆம் ஆண்டு இரவு வேளையில் சுமார் 17 இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்களைத் திருடிய குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே குறித்த நான்கு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டு களவாடப்பட்ட பெறுமதியான பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.

லண்டனில் வசிக்கும் பெண் சட்டத்தரணி ஒருவரின் தூண்டுதலின் பேரில் இந்த திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் குறித்த லண்டன் பெண் சட்டத்தரணியை கைது செய்ய நீதிமன்ற பிடியாணை பெறுவது தொடர்பில் பொலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here