அனுரவுக்கு நன்றி தெரிவிக்கும் ரணில்

0
214

தற்போதைய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க சர்வதேச நாணய நிதியத்துடன் தான் இணக்கம் தெரிவித்த கட்டமைப்பை முன்னெடுத்துச் செல்வதில் மகிழ்ச்சியடைவதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

“இந்த நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்த போது, ​​பொருளாதாரத்தை மீட்பதற்கு, இந்த நாட்டின் திறனை முழுமையாக மீண்டும் செயல்படுத்துவதே முதல் படியாக இருந்தது. தற்போதைய ஜனாதிபதி அநுர திஸாநாயக்க, நிதியமைச்சர் என்ற வகையில், சர்வதேச நாணய நிதியத்துடன் முன்னாள் அரசாங்கம் இணங்கிய கட்டமைப்பை முன்னெடுத்துச் சென்றதையிட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். ஏனென்றால் அதிலிருந்து நம்மால் வெளிவர முடியாது. அங்கு, எங்களின் தற்போதைய திறன் முடிந்த பிறகு, புதிய வழிகளைக் கண்டுபிடிக்க வேண்டும்.”

நேற்று (நவம்பர் 29) அமரி கொழும்பு இன்டர்நேஷனல் ஹோட்டல் திறப்பு விழாவில் ரணில் விக்கிரமசிங்க இதனைத் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here