புதிய ஜனநாயக முன்னணியின் நாடாளுமன்றக் குழுத் தலைவராக கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அனுராத ஜயரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று (02) பிற்பகல் நடைபெற்ற புதிய ஜனநாயக முன்னணியின் கவுன்சிலர் குழுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது.
இந்த நியமனம் தொடர்பில் சபாநாயகருக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.