ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் வெள்ளை வான்களால் கடத்தப்பட்டு சடலங்கள் அகற்றப்பட்டு முதலைகளுக்கு உணவளிக்கப்பட்ட கதை உண்மை என குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தமக்கு தெரிவித்ததாக முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியாகப் பணியாற்றி பின்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தலைவராகப் பதவியேற்ற அதிகாரி ஒருவர் உண்மைகளை மறைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக இணையச் சேனல் ஒன்றுடன் உரையாடிய போது அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிலரது தேவையற்ற பீதியால் நல்லாட்சி காலத்தில் நடத்தப்பட்ட குற்ற விசாரணைகள் தடைபட்டதாகவும் அவர் இங்கு குறிப்பிட்டுள்ளார்.
அப்போது ஸ்தாபிக்கப்பட்ட பொலிஸ் குற்றப் பிரிவுக்கு பொறுப்பாக இருந்த பிரதான அதிகாரியும் ஊழல் முறைமையில் செயற்பட்டமையினால் விசாரணைகள் தொடர்பில் பாரிய பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், இந்த விசாரணை நடவடிக்கைகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து குற்றவாளிகளை தண்டிக்க ஒரு அரசாங்கத்திற்கு ஐந்து வருடங்கள் மட்டும் போதாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.