நடுவானில் திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவு – குர்திஸ்தானில் இலங்கை பெண் உயிரிழப்பு

Date:

உடல்நலம் பாதிக்கப்பட்ட இலங்கைப் பெண் ஒருவர் கடந்த புதன்கிழமை எர்பில் சர்வதேச விமான நிலையத்தில் (Erbil International Airport) உயிரிழந்துள்ளார்.

நடுவானில் விமானம் பயணித்துக்கொண்டிருந்த போது இந்த பெண்ணுக்கு திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவால் விமானம் அவசரமாக எர்பில் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு சிகிச்சை பயணளிக்காமையால் இந்த உயிரிழப்பு இடம்பெற்றதாக குர்திஸ்தானில் உள்ள  இலங்கை தூதரகத்தின் கௌரவ அதிகார அஹமட் ஜலால் தெரிவித்துள்ளார்.

எர்பிலில் உள்ள இலங்கையின் கெளரவ தூதரக அதிகாரி அஹமட் ஜலால்,

டோஹாவில் இருந்து பாரிசுக்கு இந்தப் பெண் விமானத்தில் சென்றுக்கொண்டிருந்த போது இவ்வாறு திடீர் சுகயீனம் ஏற்பட்டுள்ளதுடன், தற்போது சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக கெளரவ தூதரக அதிகாரி  அஹமட் ஜலால், கூறியுள்ளார்.

81 வயதான குறித்த இலங்கை பெண் பிரான்சில் வசித்து வருபவர் என குர்திஸ்தானில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் கூறியுள்ளதுடன், இவரின் சடலத்தை பிரான்ஸுக்கு கொண்டுசெல்ல அவரது மகனுக்கு உரிய உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் துணை தூதரகம் கூறியுள்ளது.

“இலங்கை பிரஜை ஒருவருக்கு இப்பகுதியில் இதுபோன்ற சம்பவமொன்று நடப்பது இதுவே முதல் முறையாகும்” என தூதரக அதிகாரி அஹமட் ஜலால் கூறியுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பசில் ராஜபக்சவை கைது செய்ய உத்தரவு

2014 ஆம் ஆண்டு ஊவா மாகாண சபை தேர்தல் பிரசாரத்தின் போது...

முக்கிய அமைச்சின் செயலாளர் இராஜினாமா!

போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் நகர்ப்புற அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில...

அன்று நடந்த சம்பவம் ஒன்று!

இது 2022 ஏப்ரல் மாதத்தின் கடைசி வாரத்தில் நடந்த சம்பவம் என...

அவசரநிலை சட்டம் மேலும் நீடிப்பு

நாட்டில் அமுலில் உள்ள பொதுமக்கள் அவசரநிலை சட்டம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக விசேட...