அத்தியாவசிய பொருட்கள் 63 இன் விசேட பண்ட வரி தொடர்ந்தும் பேணப்படும்

Date:

அரிசி, பருப்பு, வெள்ளைப்பூடு, உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம், தேங்காய் எண்ணெய் உள்ளிட்ட 63 அத்தியாவசிய பொருட்களுக்கு தற்போதுள்ள விசேட பண்ட வரியை தொடர்ந்தும் பேணுவதற்கு நிதியமைச்சு தீர்மானித்துள்ளது.

முன்னதாக, டிசம்பர் 31ஆம் திகதி வரை உரிய வரிகளை அமுல்படுத்தும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்தது.

இவ்வாறு பண்டங்களுக்கான வரியில் மாற்றங்களை ஏற்படுத்தாது பேணுவதன் மூலம் பொருட்களின் விலையிலும் அதிகரிப்பு ஏற்படுத்தப்படாது என அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், உள்ளுர் விவசாயம் மற்றும் மீன்பிடித் தொழில்களை பாதுகாக்கும் நோக்கில் அமுல்படுத்தப்படும் வரி விகிதங்களிலும் மாற்றம் ஏற்படுத்தப்பட மாட்டாது என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

யாழ்ப்பாணத்தில் துப்பாக்கிச் சூடு

யாழ்ப்பாணம், தென்மராட்சி, கச்சாய் துறைமுகப் பகுதியில் நேற்று (24) இரவு 7:30...

இன்றைய வானிலை நிலவரம்

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும்...

ஜகத் விதானவுக்கு கொலை மிரட்டல்

சமகி ஜன பலவேகய களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான...

பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்கள் நிச்சயமாக தூக்கிலிடப்பட வேண்டும்!

சிறைச்சாலைகளில் உள்ள தூக்கிலிடப்பட வேண்டியவர்களின் பட்டியலில் 5 பாடசாலை மாணவர்களும் உள்ளதாக...