ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் உள்ளிட்ட ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பாளர்களை எதிக்கட்சித் தலைவர் சஜித் பிரேமாதாச சந்தித்தார்.
இச்சந்திப்பில், இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் H.E. Carmen Moreno, இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவின் பிரதி பிரதானி லார்ஸ் பிரெடல் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதான கண்காணிப்பாளராக செயற்படும் Nacho Sanchez உள்ளிட்ட தரப்பினர் கலந்து கொண்டனர்.
இங்கு, 2024 ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பாளர்களால் நடத்தப்பட்ட தேர்தல் கண்காணிப்பு அறிக்கையை கையளித்தனர்.
இச்சந்திப்பில், ஐரோப்பிய ஒன்றியத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தேர்தல் கண்காணிப்பு தலைமை செயற்பாடு அதிகாரி Jose Ignacio Sanchez Amor, பிரதி பிரதம கண்காணிப்பாளர் Inta Lase, சட்ட ஆய்வாளர் ஆன் மார்ல்பரோ, அரசியல் ஆய்வாளர் ரால்ப் மைக்கல் பீட்டர்ஸ் ஆகியோரும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்னவும் கலந்து கொண்டனர்.