உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிவிப்பு

0
260

ஏப்ரல் மாதத்திற்குள் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தேர்தல் ஆணையர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

உள்ளாட்சித் தேர்தல்கள் தொடர்பான சிறப்பு ஏற்பாடுகள் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பின்னரே தேர்தல்கள் தொடர்பான முடிவுகள் சாத்தியமாகும் என்று அவர் கூறினார்.

மாத்தறை பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற போது சமன் ஸ்ரீ ரத்நாயக்க இதனைத் தெரிவித்தார்.

தேர்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம் ஒன்றை நிறுவ வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here