கனேமுல்ல சஞ்சீவ கொலையுடன் தொடர்புடைய மேலும் இருவர் கைது

Date:

பாதாள உலக குழு தலைவர் கனேமுல்ல சஞ்சீவ கொலையுடன் தொடர்புடைய மேலும் இரு சந்தேகநபர்களை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

கடந்த 19ஆம் திகதி புதுகடை  நீதவான் நீதிமன்றில் வைத்து கனேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்டார்.

கொலைச் சம்பவம் தொடர்பான தகவல்களை மறைத்தமை மற்றும் குற்றத்திற்கு உதவிய குற்றச்சாட்டின் பேரில் நீர்கொழும்பு கட்டுவெல்லேகம பகுதியைச் சேர்ந்த பின்புர தேவகே சமிது திவங்க வீரசிங்க 23 வயது மற்றும் அதே முகவரியைச் சேர்ந்த சேசத்புர தேவகே சமந்தி 48 வயது ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்தியின் தாய் மற்றும் இளைய சகோதரர் எனத் தெரியவந்துள்ளது.

இதன்படி, இந்தக் குற்றச் செயல் தொடர்பில் இதுவரை 10 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சபாநாயகரின் தனிப்பட்ட செயலாளர் மீது லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் புகார்

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவின் தனிப்பட்ட செயலாளர் சமீர கல்லாகே, ஒரு புகாரில்...

12 பேருக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பு

பொலன்னறுவை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது...

அமரகீர்த்தி கொலை வழக்கின் தீர்ப்பு இன்று

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர்...

மேலதிக வகுப்பு, கருத்தரங்க, செயலமர்வு நடத்த தடை

2025 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை...