பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரை பிணையில் விடுவிக்க கொழும்பு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவருக்கு 9 மாத கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இஸ்லாத்தை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்ததற்காக ஞானசார தேரர் சிறையில் அடைக்கப்பட்டார்.
தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதால், தன்னை பிணையில் விடுவிக்கக் கோரி ஞானசார தேரர் தாக்கல் செய்த மறுசீராய்வு மனுவை விசாரித்த பின்னர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்ததாகக் கூறப்படுகிறது.