சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து இலங்கைக்கு மகிழ்ச்சி செய்தி

Date:

சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் குழு, 48 மாத கால நீட்டிக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் கீழ் இலங்கையுடனான மூன்றாவது மதிப்பாய்வு நிறைவு செய்துள்ள நிலையில், இதன் மூலம், பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் சீர்திருத்தங்களுக்கு ஆதரவளிப்பதற்காக, இலங்கைக்கு உடனடி நிதி வசதியாக 336 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது. 

இதுவரை இந்தத் திட்டத்தின் கீழ் சர்வதேச நாணய நிதியத்திலிருந்து இலங்கைக்கு வழங்கப்பட்ட மொத்த நிதி உதவி 1.34 பில்லியன் அமெரிக்க டொலர்களாகவும் அதிகரித்துள்ளது. 

இலங்கையின் செயல்பாடு இந்தத் திட்டத்தின் கீழ் வலுவாக உள்ளதாக சர்வதேச நாணய நிதியம் மேலும் தெரிவித்துள்ளது. 

சமூகச் செலவினங்களுக்கான சுட்டெண் இலக்கைத் தவிர, 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதிக்கான ஏனைய அனைத்து அளவு இலக்குகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. 

2025 ஆம் ஆண்டு ஜனவரி மாத இறுதியில், பல கட்டமைப்பு அளவுகோல்கள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன அல்லது தாமதத்துடன் செயல்படுத்தப்பட்டுள்ளன. 

சமீபத்தில் நிறைவு செய்யப்பட்ட கடன் மறுசீரமைப்பு பணிகள், கடன் நிலைத்தன்மையை உருவாக்குவதற்கான பாதையில் வெற்றிகரமான முடிவாக உள்ளன.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

துமிந்த திசாநாயக்கவுக்கு பிணை இல்லை!

முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க உள்ளிட்ட மூவரை எதிர்வரும் 15 ஆம்...

சபாநாயகர் குறித்து பாராளுமன்றம் விளக்கம்

பாராளுமன்றத்தின் கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்தன அவர்களுக்கும், அவருடைய தனிப்பட்ட...

கீரி சம்பா அரிசிக்கான தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய நடவடிக்கை

நாட்டில் நிலவும் கீரி சம்பா அரிசிக்கான தட்டுப்பாட்டை இல்லாதொழிக்கும் வகையில் இந்தியாவிலிருந்து...

முன்னாள் அமைச்சருக்கு கொலை மிரட்டல்

முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸுக்கு நேற்று (07) துபாயில்...