உயிர்த்த ஞாயிறு குண்டு! அவிழ்கிறது நீண்ட நாள் முடிச்சு..

Date:

உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி யாரென்பது தனக்கு தெரியுமமென பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். 

மகா சங்கத்தினரை சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுகொள்வதற்காக கண்டி சென்றிருந்த நிலையில், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

“ஈஸ்டர் தின தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் பிரதான சூத்திரதாரி ஒருவர் இருப்பதாக கூறினார்கள். தற்போது அவரை தேடுகிறார்களா? பிரதான சூத்திரதாரி யாரென்பது எனக்கு தெரியும். ஆனால் ஊடகங்களுக்கு அதை கூற முடியாது. நாட்டின் ஜனாதிபதிக்கும் பாதுகாப்புக்கு பொறுப்பாக இருப்பவர்களுக்கும் அறிவித்துவிட்டே அதனை பகிரங்கமாக அறிவிப்பேன். பிரதான சூத்திரதாரியின் ஆரம்பம், அவர் தொடர்புபட்டிருந்த நபர்கள், அவர் இருந்த இடம், பிரதான சூத்திரதாரி சஹரானுக்கு பயிற்சி அழித்த விதம், அவரை வழி நடத்திய விதம் என சகல விடயங்களும் எனக்கு தெரியும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பாராளுமன்றில் எதிர்க்கட்சி சுயாதீன அணி

அடுத்த வாரம் நாடாளுமன்றம் கூடும்போது எதிர்க்கட்சி ஒன்று சுயேச்சையாக செயற்படப் போவதாக...

உதய கம்மன்பில விரைவில் கைது

வழக்கறிஞர் அச்சல செனவிரத்ன தாக்கல் செய்த புகாரைத் தொடர்ந்து, முன்னாள் நாடாளுமன்ற...

ஓமந்தை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் பலி

வவுனியா, ஓமந்தை A9 வீதியில நேற்று (17) இரவு இடம்பெற்ற விபத்தில்...

மலேசிய திருமுருகன் ஆலயத்தில் செந்தில் தொண்டமான் வழிபாடு

மலேசிய பாராளுமன்ற உறுப்பினர் டத்தோ ஶ்ரீ சரவணனின் அழைப்பின் பேரில் மலேசியாவுக்கு...