அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் மருத்துவரை அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இன்று (மார்ச் 12) காலை கல்னேவ பகுதியில் அவர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த நபர் இராணுவத்தில் இருந்து தப்பியோடியவர் என அடையாளம் காணப்பட்டதோடு, அவரைக் கைது செய்ய ஐந்து பொலிஸ் குழுக்கள் நிறுத்தப்பட்டிருந்தன.