சில இடங்களில் தேர்தல் இடைநிறுத்தம்

Date:

கொழும்பு மாநகர சபை உட்பட பல உள்ளூராட்சி நிறுவனங்களில் உள்ளூராட்சித் தேர்தல்களை நடத்துவது தொடர்பாக அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எடுப்பதைத் தடுக்கும் வகையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (07) இடைக்காலத் தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது. 

பல அரசியல் கட்சிகள் மற்றும் சுயாதீனக் குழுக்கள் தங்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுக்களை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள அனுமதித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது. 

அதன்படி, இந்த மனுக்கள் மீதான ஆட்சேபனைகளை மே 5ஆம் திகதிக்கு முன் தாக்கல் செய்யுமாறு நீதியரசர்கள் அமர்வு உத்தரவிட்டுள்ளது. 

மனுதாரர்களின் ஏதேனும் ஆட்சேபனைகள் இருந்தால் மே 7ஆம் திகதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

இதையடுத்து, மனுக்கள் மீதான விசாரணைகளை மே 16ஆம் திகதி எடுத்துக்கொள்ள திகதியிடப்பட்டது. 

அந்த திகதி வரை குறித்த இடைக்கால தடை உத்தரவு அமுலில் இருக்கும் என்றும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் குறித்த வேட்புமனுக்கள் சமர்ப்பிக்கப்படவில்லை என்று கூறி, வேட்புமனுக்களை நிராகரிக்க தேர்தல் அதிகாரிகள் எடுத்த முடிவை சட்டவிரோதமானது என்று அறிவிக்கக் கோரி, அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

வைத்தியர் ருக்‌ஷான் பெல்லனாவுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உடல்நிலை குறித்து ஊடகங்களுக்கு அறிக்கைகளை வெளியிட்ட...

சட்டம் சகலருக்கும் சமம்!

குற்றவாளிகளைக் கைது செய்வது மற்றும் தண்டனை வழங்குவது உள்ளிட்ட விடயங்களில் சட்டம்...

ரணில் பிணையில் விடுதலை!

பொது சொத்துரிமைச் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில்...

ரணில் ஆதரவு போராட்டத்தில் அனுர கோ ஹோம் கோஷம்!

கொழும்பு தேசிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள்...