படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் தராகி தர்மரட்ணம் சிவராமின் 20வது நினைவேந்தல் நிகழ்வு இன்று (28) காலை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
ஊடக சுதந்திரத்திற்காக உயிர் தியாகம் செய்த ஊடகவியலாளர்களை நினைவுகூரும் வகையில் யாழ்ப்பாணம் சுப்பிரமணியம் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபிக்கு அருகில் இந்த நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நினைவேந்தலுடன் இணைந்து, முந்தைய ஆட்சிகளின் போது கொலை செய்யப்பட்டு காணாமல் போன ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி ஒரு போராட்டமும் நடத்தப்பட்டது.
இந்தக் போராட்டத்தை யாழ்ப்பாண ஊடக சங்கம் மற்றும் வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கைச் சேர்ந்த ஊடக அமைப்புகள் ஏற்பாடு செய்திருந்தன.







