இலங்கையில் செலவு மீட்பு அடிப்படையிலான மின்சார விலை நிர்ணயத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்தியுள்ளது.
இது நிதி ஆபத்துகளைக் குறைப்பதற்கும், சர்வதேச நாணய நிதியத்தின் நீட்டிக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் நான்காவது மதிப்பாய்வை வெற்றிகரமாக முடிப்பதற்கும் அவசியமானது என சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை பணி தலைவர் எவன் பபகியோர்ஜியோ தெரிவித்துள்ளார்.
முன்னதாக இது தொடர்பாக சர்வதேச நாணய நிதியம் வெளியிட்ட அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கீழ் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளை நிறைவேற்றுவதன் மூலம், சர்வதேச நாணய நிதியத்தின் ஊழியர் மட்ட உடன்படிக்கையை பெறுவதற்கு நிர்வாக சபையின் அங்கீகாரம் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(i) செலவு மீட்பு அடிப்படையிலான மின்சார விலை நிர்ணயத்தை மீண்டும் நிறுவுதல் மற்றும் தானியங்கி மின்சார விலை சரிசெய்வு பொறிமுறையின் சரியான செயல்பாட்டை உறுதி செய்யும் முன்நிபந்தனைகளை செயல்படுத்துதல்.
(ii) பன்னாட்டு பங்குதாரர்களின் உறுதியளிக்கப்பட்ட நிதி பங்களிப்பு மற்றும் கடன் மறுசீரமைப்பில் (debt restructuring) போதுமான முன்னேற்றம் இருப்பதை உறுதிப்படுத்துவதற்கு முக்கிய கவனம் செலுத்தி, நிதி உறுதிப்பாடு மதிப்பாய்வை முடித்தல்.