பொகவந்தலாவ பிரதேசத்தில் நேற்று பிற்பகல் பல இடங்களில் ஆலங்கட்டி மழை பெய்துள்ளது.பொகவந்தலாவ நகரிலும் பொகவந்தலாவ ஆரியபுர மற்றும் சிறிபுர பகுதிகளிலும் நேற்று மாலை 4 மணியளவில் ஆலங்கட்டி மழை பெய்ததாக குறிப்பிடப்படுகின்றது.
பொகவந்தலாவ பிரதேசத்தில் பல இடங்களில் சுமார் 30 நிமிடங்களுக்கு பலத்த மழையும் பெய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆலங்கட்டி மழை என்பது வானத்திலிருந்து விழும் திடநிலைப் பொழிவாகும். பந்துகளாகவோ ஒழுங்கற்ற உருண்டைகளாகவோ உள்ள பனிக்கட்டிகளான இவற்றை ஆலங்கட்டி என்கிறோம்