மார்ச் 2 இன்றய வானிலை நிலவரம்

Date:

வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் நுவரெலியா, மாத்தளை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

வடக்கு மாகாணத்தில் சிறிதளவான மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.


மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் கண்டி மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.


இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.


காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 25-35 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


காங்கேசந்துறையிலிருந்து மன்னார் மற்றும் புத்தளம் ஊடாக கொழும்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-45 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.


கடல் நிலை: காங்கேசந்துறையிலிருந்து மன்னார் மற்றும் புத்தளம் ஊடாக கொழும்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும்.
நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் சாதாரண முதல் மிதமான அலையுடன் காணப்படும்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

வத்திக்கான் வெளியுறவு அமைச்சர் இலங்கை வருகிறார்

வத்திக்கான்  வெளியுறவு அமைச்சர் பேராயர் பால் ரிச்சர்ட் கல்லாகர்  எதிர்வரும் நவம்பர்...

பத்மேவுடன் தொடர்பு – ஐந்து நடிகைகளுக்கு சிக்கல்

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள பிரதான சந்தேகநபரான கெஹெல்பததர பத்மே உடன் வெளிநாடுகளுக்குச்...

இலங்கை பெண்கள் நால்வர் சடலங்களாக மீட்பு

சென்னை எண்ணூர் பெரிய குப்பம் கடற்கரையில் நான்கு பெண்களின் சடலங்கள் கரை...

எரிபொருள் விலை மாற்றம்

மாதாந்த எரிபொருள் விலைச் சூத்திரத்திற்கு அமைய, நேற்று (31) நள்ளிரவு 12.00...