சுகாதார தொழிற்சங்கங்கள் இன்றும் நாளையும் ஊதிய முரண்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு காணாததை கண்டித்து அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இன்று காலை 8 மணி முதல் நாடளாவிய ரீதியில் வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதார தொழிற்சங்க கூட்டணியின் ஏற்பாட்டாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், சிறுவர் வைத்தியசாலைகள், புற்றுநோய் வைத்தியசாலைகள், மகப்பேறு வைத்தியசாலைகள், மத்திய இரத்த வங்கி மற்றும் கொழும்பு தேசிய தொற்று நோய்கள் நிறுவகம் ஆகியன இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.