இந்நாட்டின் இலட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு உரித்தான ஊழியர் சேம இலாப நிதியம் உட்பட ஏனைய நிதியங்களில் மீது மிகைக்கட்டண வரியை விதிப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டதுடன் அதற்கு எதிராக நிபந்தனையின்றி மக்களுக்காக நாம் போராடினோம்.
அதனுடன் நின்று விடாமல் குறித்த வரி சட்டமூலத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி உயர்நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தது.
இதன்பிரகாரம் 13 நிதியங்களை மிகைக்கட்ண வரி விதிப்பில் இருந்து வரி நீக்கம் செய்வதாக சட்டமா அதிபர் நீதிமன்றத்தின் முன்னிலையில் தெரிவித்தார்.
இது இலட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு கிடைத்த வெற்றியாகும்.
இந்த வெற்றிக்காக நீதிமன்றம் சென்ற ஒரே அரசியல் கட்சி ஐக்கிய மக்கள் சக்தி மாத்திரமே.உழைக்கும் மக்களின் நாமத்தினால் இந்த வெற்றியை முன்னிட்டு நாம் பெருமையடைகிறோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.