கீரி சம்பா அரிசிக்கான தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய நடவடிக்கை

Date:

நாட்டில் நிலவும் கீரி சம்பா அரிசிக்கான தட்டுப்பாட்டை இல்லாதொழிக்கும் வகையில் இந்தியாவிலிருந்து கீரி சம்பா அரிசியையொத்த ஜீ.ஆர். ரக அரிசியை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டிலுள்ள அரிசிக்கான மாபியாக்களை ஒழிக்கும் வகையிலேயே இந் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதற்கிணங்க இந்தியாவிலிருந்து 40ஆயிரம் மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்படுவதோடு, ஒரு கிலோ அரிசியை 250 ரூபாவுக்கும் குறைந்த விலையில் விற்பனை செய்யமுடியுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சிறுபோக அறுவடையின் பின்னர் நாட்டில் அரிசிக்குத் தட்டுப்பாடு ஏற்படாது என சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர், எனினும், சீரற்ற காலநிலை மற்றும் ஏனைய காரணங்களால் அவை தடைப்படுமிடத்து அரிசியை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

வெலிக்கடை தமிழர் படுகொலை! கொல்லப்பட்ட குட்டிமணி மற்றும் குழுவினர் அடக்கம் செய்யப்பட்ட இடம் வெளியாகியுள்ளது! (EXCLUSIVE)

நான்கு தசாப்தங்களுக்கு முன்னர் வெலிக்கடை சிறையில் சிங்கள கைதிகளால் இரண்டு நாட்களில்...

பத்மே உட்பட 5 பேர் தொடர்பில் இன்று நீதிமன்றத்தில் தகவல்

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட கெஹெல்பத்தர பத்மே உட்பட 5...

வென்னப்புவ துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

வென்னப்புவ காவல் நிலையத்திற்கு அருகிலுள்ள வேவா சாலைப் பகுதியில் இன்று (31)...

செம்மணி – சர்வதேச விசாரணைக்கு புலம்பெயர் தமிழர்கள் பிரித்தானிய அரசாங்கத்துக்கு அழுத்தம்!

செம்மணி மனிதப் புதைகுழிக்கு சர்வதேச விசாரணையே ஒரே தீர்வு. பாதிக்கப்பட்ட தரப்பாக...