குடாநாட்டில் ஆலயங்களில் இடம்பெற்ற விக்கிரகங்கள் திருட்டுடன் இராணுவம் மற்றும் கடற்படையினருக்கு நேரடித் தொடர்பு இருப்பது பொலிசாரினால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தின் பல ஆலயங்களில் பித்தளை விக்கிரகங்களை களவாடி இரும்பு வர்த்தகர்கள் ஊடாக கொழும்பிற்கு கடத்தும. செயல்பாடுகள் நீண்டகாலமாக இடம்பெறுவதாக குற்றம் சாட்டப்பட்டு வந்தது .
இவ்வாறு இடம்பெறும் செயல்களில் காங்கேசன்துறையில் உள்ள பிள்ளையார் ஆலயத்தின. பிள்ளையார் சிலை களவாடப்பட்டபோது எதிரே இருக்கும் விகாரை தொடர்பிலும் பிரஸ்தாபிக்கப்பட்டபோதும் அந்த சிலை கண்டுபிடிக்கப்பட்ட சமயம் அதனை உடமையில் வைத்திருந்தவர்கள் கிருஸ்தவர்கள் என்பதும் கொழும்பிற்கு கடத்துபவர்கள் இஸ்லாமியர்கள் என்பதனால் மறவன்புலவு ஐயா அந்த இரு மதத்தவர்களையும. நிந்தனை செய்தாரே அன்றி பௌத்தர்களை புனதராக கருதினார்.
இருந்தபோதும் யாழ்ப்பாணக் குடாநாட்டில் இடம்பெற்ற அத்தனை சிலை திருட்டினையும் மேற்கொண்டு விநியோகித்தவர்கள் 3 இராணுவத்தினரும் ஒரு கடற்படை புலனாய்வாளரும் என தற்போது கண்டறியப்பட்டுள்ளதனையடுத்து அனைவரும் மௌனம் காப்பதாக குற்றம் சாட்டப்படுகின்றது.Attachments area